தாராபுரம் நகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகம்
தாராபுரம் நகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகம் நடைபெற்றது;
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட1,2,4 ஆகிய வார்டு பகுதிகளுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு தாராபுரம் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமை தாங்கினார். தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இரண்டு பேருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில், தாசில்தார் ராமலிங்கம், நகராட்சி பொறியாளர் சுகந்தி, கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ராஜாதி பாண்டியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.