தேசிய அளவிலான புகைப்பட போட்டியில் தஞ்சாவூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞருக்கு விருது

புகைப்படக் கலைஞருக்கு விருது;

Update: 2025-08-22 06:41 GMT
தேசிய அளவிலான புகைப்படப் போட்டியில், தஞ்சாவூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச புகைப்படக் கவுன்சில் மற்றும் இந்திய புகைப்படக் கழகம், ஆந்திர மாநில படைப்பாற்றல் மற்றும் கலாச்சார ஆணையம் இணைந்து, 2025-ஆம் ஆண்டு உலக புகைப்பட தினத்தையொட்டி, தேசிய அளவிலான புகைப்படப் போட்டியை நடத்தினர். இந்தப் போட்டியில் தஞ்சாவூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆர்.மணிவண்ணன்(44) பங்கேற்று, பழங்குடியினரின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை தொடர்பான புகைப்படங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து தேர்வு குழுவினர் "2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த பழங்குடி புகைப்பட விருது" மணிவண்ணனுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உலக புகைப்பட தின விழா கொண்டாட்டம் ஆக.19 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தஞ்சாவூர் புகைப்பட கலைஞர் மணிவண்ணனுக்கு அதற்கான விருதை, ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத் தலைவர் நுகாசினி பாலாஜி, ஆந்திர மாநில கலாச்சார ஆணையத்தின் தலைவர் மல்லிகா அர்ஜூனாராவ், சட்டப்பேரவை உறுப்பினர் மண்டலி புத்த பிரசாத், முன்னாள் எம்பி கோகோராஜூ கங்கா ராஜூ,  இந்திய புகைப்பட சங்க நிறுவனத் தலைவர் தம்மா சீனிவாஸா ரெட்டி, துணைத் தலைவர் சுந்தர் கோம்பள்ளி ஆகியோர் கலந்து கொண்டு மணிவண்ணனுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர். படவிளக்கம்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற உலகபுகைப்பட தின விழாவில் தஞ்சாவூரைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆர்.மணிவண்ணனுக்கு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றமைக்காக விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Similar News