அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஓட்டுச் சாவடி பரிசீலனை ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஓட்டுச் சாவடி பரிசீலனை ஆலோசனை கூட்டம் நடந்தது;

Update: 2025-08-22 11:25 GMT
குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில் 40க்கும் மேற்பட்டப் ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவைகளில் ஆயிரத்து 200 க்கும் அதிகமான ஓட்டுக்கள் உள்ள ஓட்டுச்சாவடிகள் அதிகம் உள்ளன. இவைகளை பரிசீலித்து, ஆயிரத்து 200 க்கும் அதிகமான ஓட்டுக்கள் உள்ள ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அவைகளில் அதிகமாக உள்ள வாக்காளர்களை புதிய ஓட்டுச்சாவடி அமைத்து, அதில் சேர்க்கும் பணியும், ஆயிரத்து 200 க்கும் குறைவாக உள்ள ஓட்டுச்சாவடிகளில், மற்ற ஓட்டுச்சாவடிகளிலிருந்து வரும் வாக்காளர்களை இணைக்கும் பணியும் நடக்கவுள்ளது. இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம், குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலரும், தேர்தல் நடந்தும் அலுவலருமான சுரேஷ்குமார் தலையை வகித்தார். இதில் தி.மு.க. சார்பில் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, காங்கிரஸ் ஜானகிராமன், மக்கள் நீதி மய்யம் மண்டல நிர்வாகி காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர். இதில் அனைத்து கட்சியினர் கூறிய கருத்துக்கள் கேட்கப்பட்டது. மாவட்ட கலெக்டரின் உத்திரவுப்படி மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கபப்டும்.

Similar News