க.பரமத்தி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.
க.பரமத்தி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.;
க.பரமத்தி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 31 செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தீண்டாமைக்கு எதிராகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது . இதனை தொடர்ந்து க.பரமத்தி ஒன்றியத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் கந்தசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், ராஜா முகமது ஒன்றிய செயலாளர் குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சென்னையில் இருந்து வந்த கலைக்குழுவினர் பொதுமக்கள் மத்தியில் தீண்டாமைக்கு எதிரான கலை நிகழ்ச்சியை நடத்தினர்.