தளவாபாளையம்-டூ வீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

தளவாபாளையம்-டூ வீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.;

Update: 2025-08-22 12:12 GMT
தளவாபாளையம்-டூ வீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அர்த்தநாரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து வயது 67. இவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 6:30 மணி அளவில் சேலம் - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் கரூர் மாவட்டம் தளவாபாளையம் தனியார் ஓட்டல் அருகே சென்றபோது , அதே சாலையில் பின்னால் வந்தசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் அக்யா பால் வேகமாக ஓட்டி வந்த கார் காளிமுத்து டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த காளிமுத்துவின் மகள் சரோஜா வயது 37 என்பவர் அளித்த புகாரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய ராம் அக்யா பால் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News