கரூர்-கொலை முயற்சி வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது.
கரூர்-கொலை முயற்சி வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது.;
கரூர்-கொலை முயற்சி வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை தெற்கு மாடு விழுந்தான் பாறை கிராமத்தில் கடந்த 28.07.25 ல் ராஜா என்பவருக்கும் அவரின் மாமா முருகானந்தம் என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முருகானந்தம் ராஜாவின் அப்பா செல்வராஜ் என்பவரை இடது வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முருகானந்தம் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டடார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 6- வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளை பரிசீலித்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவின் படி ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் எதிரி முருகானந்தம் என்பவரை நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.