நாவல் நகர் அருகே நள்ளிரவில் லாரிகள் மோதல். ஒருவர் உயிரிழப்பு.
நாவல் நகர் அருகே நள்ளிரவில் லாரிகள் மோதல். ஒருவர் உயிரிழப்பு.;
நாவல் நகர் அருகே நள்ளிரவில் லாரிகள் மோதல். ஒருவர் உயிரிழப்பு. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மாட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்வயது 45 லாரி டிரைவர். இவருடன் பணியாற்றிய அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபி வயது 40. இருவரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணி அளவில் சேலம் கரூர் சாலையில் அவரது லாரியை ஓட்டி வந்து நாவல் நகர் பகுதியில் நிறுத்தி தங்கள் லாரியில் உள்ள டீசல் டேங்க் ஐ பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த மற்றொரு அசோக் லேலண்ட் லாரி நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்படுகாயம் அடைந்த கோபியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சசிகுமார் அளித்த புகாரில் வாங்கல் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.