ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்க எஸ்பிடம் கிராம மக்கள் புகார்.
ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்க எஸ்பிடம் கிராம மக்கள் புகார்.;
ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்க எஸ்பிடம் கிராம மக்கள் புகார். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் மேல் பாகம் கிராமம் புது கஞ்சமுனூரை சேர்ந்த பழனிசாமி மாரிமுத்து, பெரியசாமி, மற்றொரு பழனிசாமி ஆகிய 4- பேருக்கு சொந்தமான 12 ஏக்கர் பூர்விகா நிலத்தை அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த காளிமுத்து என்பவர் அவரது குடும்பத்தினரும் மேற்கண்ட நான்கு பேரின் நிலங்களை ஆக்கிரமித்து அவர்கள் பெயரில் மோசடியாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நிலம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது நீங்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள் என்று ஊர் கிராம மக்கள் கேட்டால் அதற்கு காளிமுத்து நீங்க இந்த இடத்தை என்னிடம் கொடுத்து விட வேண்டும் இல்லை என்றால் உங்கள் மீது என் ஜாதியை சொல்லி திட்டுகிறாய் என்று பொய் புகார் கொடுப்பேன் என்று மிரட்டல் விடுத்ததால் இது குறித்து கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். கிராம மக்கள் புகார் அளிக்க திரண்டு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.