கடன் சுமை காரணமாக தனியார் நிறுவன பணியாளர் பூச்சி மருந்து குடித்து இறப்பு
குமாரபாளையத்தில் கடன் சுமை காரணமாக தனியார் நிறுவன பணியாளர் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.;
குமாரபாளையம் அம்மன் நகரில் வசித்து வந்தவர் மோகன், 31. தனியார் நிறுவன பணியாளர். கடன் சுமை காரணமாக, இவர் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்துள்ளார். இதனால் மயங்கிய இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 08:00 மணியளவில் இறந்தார். இவரது மனைவி புஷ்பராணி, குழந்தை பிறப்புக்கு திருச்சியில் உள்ள தன பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து நேரில் வந்தார். கடன் கட்ட புஷ்பராணி தன் நகையை கொடுத்ததாகவும், அதை மோகன் அடமானம் வைத்து விட்டதாகவும் தெரிய வருகிறது. இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது. மோகன் இறப்பு குறித்து, புஷ்பராணி புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.