கொண்டபாளையம் காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு!
காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு!;
அரக்கோணம் உட்கோட்டத்திலுள்ள கொண்டபாளையம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், நேற்று மாலை சனிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தவரிடம் நேரடியாக விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டார். பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.