சேலம் கருப்பூர் அருகே மேட்டுப்பதி கிராமத்தை சேர்ந்தவர் தனம் (வயது 55). பூ வியாபாரம் செய்து வரும் இவர், இஸ்கான் கோவில் அருகே பூ கட்டும் தொழில் செய்து வந்தார். வழக்கம்போல் தனம் வீட்டை பூட்டிவிட்டு பூ கட்டுவதற்கு சென்றுவிட்டார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் புகுந்து ரூ.5 ஆயிரத்தை திருடிக்கொண்டு வெளியே சென்றார். இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் பொதுமக்களை பார்த்தவுடன் தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து கருப்பூர் போலீசில் தனம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனம் வீட்டில் பணத்தை திருடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.