ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு;

Update: 2025-08-24 06:30 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காவ லாக்குறிச்சி புதூர் கால னியை சேர்ந்தவர் மாடன் மகன் வைரவசாமி (69). விவ சாயியான இவருக்கு சொந் தமாக ரெட்டியார்பட்டி மெயின் ரோட்டின் அருகேயுள்ள தோட்டம் உள்ளது. இந்நிலையில் அவரது தோட்டத்தில் பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் உயிருக்குபோராடியது. உடனே ஆலங்குளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு ஆலங்குளம் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் விஸ்வநாதன் தலைமை யில் வீரர்கள் சாகுல்ஹமீது, திருமலை குமார், ஆனந்தகு மார், விவேக், தனசிங் ஆகி யோர் விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

Similar News