கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கொள்ள கரூரில் புதிய செயலில் அறிமுகம்.

கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கொள்ள கரூரில் புதிய செயலில் அறிமுகம்.;

Update: 2025-08-24 08:59 GMT
கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கொள்ள கரூரில் புதிய செயலில் அறிமுகம். வணிக நுகர்வில் முன் எப்போதும் இல்லாத அளவில் புதிய புதிய மாற்றங்களும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கையாளும் உத்திகளும் வளர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி வருவதால் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கொள்வதற்காகபுதிய செயலி ZAAROZ அறிமுகம் இன்று கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் கரூர் சங்க தலைவர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் வர்த்தக சங்கத் தலைவர் வழக்கறிஞர் ராஜு செயலாளர் வெங்கட்ராமன் செயலி நிர்வாகி ராம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த செயலி மூலம் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஹோட்டல்களில் தயாராகும் உணவுப் பொருட்களை வீடுகள் தோறும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமின்றி டெலிவரி செய்யப்படும் என தெரிவித்தனர்.

Similar News