பவித்திரமேடு -டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
பவித்திரமேடு -டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.;
பவித்திரமேடு -டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் வயது 63. இவர் திங்கள் கிழமை கோவை - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் பவித்திரம் மேடு அருகே வந்தபோது , கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் உதயகுமார் டூவீலர் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த உதயகுமாரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். .இந்த சம்பவம் தொடர்பாக உதயகுமார் அளித்த புகாரில் க.பரமத்தி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மோகன் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர் .