தாந்தோன்றிமலை- பாலியல் தொழிலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது.

தாந்தோன்றிமலை- பாலியல் தொழிலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது.;

Update: 2025-08-24 09:16 GMT
தாந்தோன்றிமலை- பாலியல் தொழிலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது. கரூர் மாவட்டத்திற்கு, ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு பணிக்கு வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது குறித்து கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இந்நிலையில், விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கரூர் தாந்தோன்றிமலை ஊரணி மேட்டு பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தியபோது, பாஜக உள்ளாட்சி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ரகுபதி பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது உறுதி செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ரகுபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்த போலீசார், அந்த வீட்டிலிருந்து விபச்சார நடத்த உதவியாக இருந்த பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Similar News