கரூரில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு இயற்கை வேளாண் திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு.

கரூரில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு இயற்கை வேளாண் திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு.;

Update: 2025-08-24 10:23 GMT
கரூரில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு இயற்கை வேளாண் திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு. வளர்ந்து வரும் அவசர உலகில் உணவு உற்பத்திக்காக அதிகப்படியான ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவு இன்று ஒவ்வொரு வீட்டிலும் வியாதியஸ்தர்கள் உருவாகி வருகின்றனர். இதன் காரணமாக அண்மைக்காலமாகவே இயற்கை விவசாயத்தின் மீதான தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்தித்து இயற்கை விவசாயம் குறித்து பதிவு செய்த கருத்துக்களும் பயிற்சிகளும் இன்று அதற்கான சூழல்கள் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் கரூர் இயற்கை விவசாயிகள் சங்கம் , நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் ,ஜெயராம்ஸ் கலை அறிவியல் கல்லூரி ,கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,ஜே சி ஐ கரூர் டைமண்ட் மற்றும் ஒய்ஐ கரூர் ஆகியோர் இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு இயற்கை வேளாண் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் மொத்தம் 80 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் விவசாயிகள் நேரடியாக தாங்கள் தயாரித்த இயற்கை வேளாண் மதிப்பு கூட்டிய பொருட்களுடன் 30 அரங்குகளை அமைத்திருந்தனர். இந்த அரங்கில் இயற்கை விவசாயம் செய்வதற்கான பல்வேறு ஆலோசனைகள் , அதற்கான புத்தகங்கள் , மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் , விவசாயத்தில் ஆள் பற்றாக்குறையை போக்கும் புதிய வகை விவசாய கருவிகள் ,மண்புழு உரம் தயாரித்தலுக்கான பயிற்சி,நன்மை தரும் பூச்சி ,தீமை தரும் பூச்சி குறித்த விளக்கம்,இயற்கை உரம் தயாரித்தல் , நெல் நாற்றங்கால்களில் புதிய தொழில்நுட்பங்கள்,விவசாயிகளை சோதிக்கும் களை மேலாண்மையில் புதிய கருவிகள் கொண்டு களைகளை அகற்றுவது, விவசாய பணிகளை எளிமையாக மேற்கொள்வதற்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் கையால் இயக்கக் கூடிய கருவிகள் பாரம்பரிய விதை ரகங்கள் என ஏராளமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இயற்கை வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் விதைகளுடன் இன்று கண்காட்சியில் பங்கேற்றனர். மேலும் திருவிழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தரமான இயற்கையான பொருட்கள் தயாரிப்பது குறித்தான விளக்கக் கையேடுகளும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் விவசாயிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News