தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை அமைச்சர் ஆய்வு செய்தார்
அரசு மருத்துவமனைகளை அமைச்சர் ஆய்வு செய்தார்;
தென்காசிக்கு வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் தென்காசி தலைமை மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார் தென்காசி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்க , பத்திரிகையாளர்கள் எதையும் தெரிந்து கொள்ளாமலே கேள்வி கேட்கிறீர்கள். தமிழகத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பதே இல்லை . குறிப்பாக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை என்றவர் அருகில் இருந்த மருத்துவ அதிகாரி ஒருவரை அளித்து இங்கு எத்தனை பணியிடம் உள்ளது எத்தனை காலியாக உள்ளது என்று கேட்டார். அந்த அதிகாரி 42 பணியிடங்கள் உள்ளது 42ம் நிரப்பப்பட்டு விட்டது என்றார். உரிய மருத்துவர்கள் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள் அவர்களிடம் இதை சொல்லுங்கள் என்றவர். தெரிந்து வைத்துக் கொண்டு கேள்வி கேளுங்கள் என்றார் தொடர்ந்து செய்தியாளர்கள் விடாமல் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார சேவையில் 6,563 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என்று நீங்களே அறிவிப்பு கொடுத்திருக்கிறீர்கள். என்று கேட்டனர். இதற்கு அமைச்சர் அதுதான் முந்தாநாள் கூட 1644 மருத்துவர்களுக்கு முதல்வர் பணியாணை வழங்கி இருக்கிறார். நிருபர்கள் கொஞ்சம் அப்டேட் ஆக இருக்க வேண்டும். நேற்று நடந்தது கூட உங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னார். இன்னொரு செய்தியாளர் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று சொன்னதை காதில் வாங்காமல் புறப்பட்டு விட்டார்