சுரண்டையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது
இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் 81வது மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இலவச கண் துரை அறுவை சிகிச்சை முகாம் இன்று சுரண்டை ஸ்ரீ ஜெயந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த இலவச கண் மருத்துவ முகாமில் 105 பேர் கண் சிகிச்சையும், 90 பேர் பொது மருத்துவ சிகிச்சையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.