கரூரில் சோரோஸ் ஆப் மூலம் வீடு தேடி வரும் உணவு பொருள்.கருப்பசாமி பேட்டி.
கரூரில் சோரோஸ் ஆப் மூலம் வீடு தேடி வரும் உணவு பொருள்.கருப்பசாமி பேட்டி.;
கரூரில் சோரோஸ் ஆப் மூலம் வீடு தேடி வரும் உணவு பொருள்.கருப்பசாமி பேட்டி. கரூர் திண்ணப்பா கார்னரில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்க கரூர் மாவட்ட தலைவர் கருப்பசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூரில் பொதுமக்கள் ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொருட்களை வீட்டில் இருந்தவாறு பெறுவதற்காக இன்று சோரோஸ் என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கடைகளில் இந்த சோரோஸ் ஆப் மூலம் பொதுமக்கள் உணவு பொருட்களை ஆர்டர் செய்வதன் மூலம் அதிக செலவில்லாமல் கடை விலைக்கு வீட்டிற்கு டெலிவரி செய்து தரப்படும் எனவும் , காலை 7:00 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த சேவை நடைபெறும் எனவும் , கரூர் சுற்றுவட்டாரத்தில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்து பொதுமக்களும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.