கரூரில்-காவல்துறை துணையோடு பாதுகாப்பில்லாமல் நடத்திய விளம்பர பேரணி.
கரூரில்-காவல்துறை துணையோடு பாதுகாப்பில்லாமல் நடத்திய விளம்பர பேரணி.;
கரூரில்-காவல்துறை துணையோடு பாதுகாப்பில்லாமல் நடத்திய விளம்பர பேரணி. கரூர் திண்ணப்பா கார்னரில் உள்ள தனியார் கூட்டரங்கில் சோரோஸ் என்ற செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியை கரூரில் உள்ள பொதுமக்களிடையே பிரபலப்படுத்துவதற்கு செயலிக்காக பணியாற்றக்கூடிய நபர்கள் மூலம் டூவீலரில் நகரை வலம் வந்து விளம்பரப்படுத்தும் பேரணி நிகழ்ச்சி திண்ணப்பா கார்னரில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக கரூரில் காவல்துறையினர் டூவீலரில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுருத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற டூவீலர் பேரணியில் பங்கேற்ற 25 பேரில் எட்டு பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்தனர்.மீதமுள்ளவர்கள் தலைக்கவசம் அணியாமல் பேரணியில் பங்கேற்றனர். இந்தப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் , பின்னர் பாதுகாப்புடன் சென்றதும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் செயலுக்கு எதிராக நடைபெற்ற இந்த பேரணி சமூக ஆர்வலர்கள் இடையே கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.