பாஜக ஆட்சி ஆபத்தானது. பாலகிருஷ்ணன் கரூரில் பேட்டி.
பாஜக ஆட்சி ஆபத்தானது. பாலகிருஷ்ணன் கரூரில் பேட்டி.;
பாஜக ஆட்சி ஆபத்தானது. பாலகிருஷ்ணன் கரூரில் பேட்டி. இந்திய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு கட்சி ஸ்தாபனம் என்ற தலைப்பில் அரசியல் ஸ்தாபன பயிலரங்க கூட்டம் இன்று உழவர் சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் என நம்புகிறோம். செயல்படுத்தவில்லை என்றால் அரசு ஊழியர்கள் கடுமையாக போராடுவார்கள் என்ற அவர் , எங்களைப் பொறுத்தவரை பாஜக வீழ்த்துகின்ற பரந்த அணியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும்.திமுக ஆட்சியில் நடக்கின்ற அனைத்துக்கும் அவர்களே பொறுப்பு. அதில் நல்லது என்றால் வரவேற்போம். கெட்டது என்றால் விமர்சிப்போம் என்றும் , பாசிச குணம் கொண்ட பாஜக இனியும் ஆட்சியில் இருப்பது ஆபத்தானது என்று தெரிவித்தார்.