தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் மொபைல் சார்ஜிங் வசதி

மொபைல் சார்ஜிங்;

Update: 2025-08-24 14:42 GMT
திருச்சி, மத்திய மண்டல அஞ்சல் தலைவர்,  அறிவுறுத்தலின் பேரில், தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் புதிதாக வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மொபைல் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூடுதல் சேவையாக அமைகிறது. இந்த மொபைல் சார்ஜிங் நிலையம், அஞ்சல் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில், வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு வகை மொபைல் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்டுகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதிகளை வழங்குவதற்கு அஞ்சல் துறை கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகம், பல்வேறு அஞ்சல் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதுடன், இதுபோன்ற கூடுதல் வசதிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. ஆகவே, வாடிக்கையாளர்கள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்ற தகவலை தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கு.தங்கமணி தெரிவித்துள்ளார்.

Similar News