தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு கட்டங்களாக உயர் கல்விக்குப் படி முகாம்
உயர்கல்வி வழிகாட்டி முகாம்;
தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க, 100 சதவீதம் உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிதது பல்வேறு காரணங்களினால் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பைத் தொடர உரிய ஆலோசனைகள் மற்றும் உடனடி சேர்க்கை வழங்குவதற்காக, நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் ”உயர்வுக்குப்படி 2025” முகாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, 25.08.2025 மற்றும் 04.09.2025 ஆகிய நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லுரியிலும், 29.08.2025 மற்றும் 10.09.2025 ஆகிய நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கும்பகோணம் AHSS சரஸ்வதி பாடசாலையிலும், 02.09.2025 மற்றும் 12.09.2025 ஆகிய நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் 12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிதது பல்வேறு காரணங்களினால் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு கலைக்கல்லுரிகள், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐக்களில் நேரடி சேர்க்கைக்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்விக் கடன் மற்றும் கல்வி உதவித் தொகை குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் உயர்கல்வியில் சேர விருப்பமுள்ளவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும், முகாமின் போது மாணவர்கள் ஆதார் அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.