சிங்காரப்பேட்டை: டூ வீலர் கவிழ்ந்து கூலி தொழிலாளி காயம்.

சிங்காரப்பேட்டை: டூ வீலர் கவிழ்ந்து கூலி தொழிலாளி காயம்.;

Update: 2025-08-25 00:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அடுத்த கானம்பட்டி பகுதியை சேர்ந்த வேடியப்பன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது இவர் எக்கூரில் உள்ளார். இந்த நிலையில் இங்கிருந்து நேற்று கானம்பட்டிக்கு டூ வீலரில் செல்லும் போது மகனூர்பட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவரை அருகில் இருந்தவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

Similar News