ஓசூரில் இளம் பெண் திராவகம் குடித்து தற்கொலை.

ஓசூரில் இளம் பெண் திராவகம் குடித்து தற்கொலை.;

Update: 2025-08-25 00:17 GMT
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் லட்லேய். இவருடைய மனைவி ரோஷினி பர்வீன்(20). இவர்கள் ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினையால் கண வன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ரோஷினி பர்வீனுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 21-ஆம் தேதி அன்று ரோஷினி வீட்டிற்கு வரவில்லை. இதை ரோஷினியின் பர்வீனின் பெற்றோர் மகளை கண்டித்தனர். இதில் மனமுடைந்த ரோஷினி பர்வீன் திராவகம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு ஓசூர்- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News