காவேரிப்பட்டணம் அருகே டூவீலர் மீது வேன் மோதி தையல் தொழிலாளி உயிரிழப்பு.

காவேரிப்பட்டணம் அருகே டூவீலர் மீது வேன் மோதி தையல் தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-08-25 02:39 GMT
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எண்டம்பட்டி பகுதியை சோ்ந்தவா் தேவராஜ் (61) தையல் தொழிலாளியான. இவா் டூவீலரில் கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் காவேரிப்பட்டணம் சுப்பிரமணியபுரம் தனியார் பள்ளி அருகே கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவராஜை மீட்டு காவேரிப்பட்டணம்-கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார் அங்கு அவா் உயிரிழந்தார். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News