பல்லடத்தில் சுவர் விளம்பரம் எழுதத் திரண்ட அதிமுகவினர் பரபரப்பு
சுவர் விளம்பரம் எழுத திரண்ட அதிமுகவினர் பல்லடம் நால் ரோட்டில் பரபரப்பு;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பதில் உள்ள தனியார் நிறுவனத்தின் சுவரில் அரசியல் விளம்பரம் செய்வதற்கு அதிமுகவிற்கு திமுகவினர் இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு வைத்து நேற்றைய முன்தினம் காவல் நிலையத்தில் அதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று காலை அதிமுகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் நால்ரோடு பகுதியில் ஒன்று கூடி முன்வந்து ஏற்கனவே நவம்பர் மாதத்திற்கு இடம் பிடித்து வைத்திருந்த திமுகவினரின் நிரந்தர சுவர் ஆக்கிரமிக்கும் நோக்கத்தை முறியடித்து நவம்பர் மாதத்திற்கு இடம் பிடித்து வைத்த விளம்பரங்களை அழித்தனர், அதனை தொடர்ந்து வரும் 12ஆம் தேதி சுற்றுப்யணத்தில் ஈடுபடும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்லடம் நால் ரோட்டில் சிறப்புரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து அதற்கான சுவர் விளம்பரம் எழுத பல்லடத்தில் அதிமுகவிற்கு சவாலாக இருந்த சுவர் விளம்பரத்தை அழித்து தற்போது விளம்பரம் எழுதும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திமுகவினர் திரள வாய்ப்பு இருப்பதாக எதிர்பாத்த நிலையில் யாரும் வராததால் பரபரப்பு தவிர்க்கப்பட்டது