ராமநாதபுரம் இடைநிலை ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை வென்றிட தென் மண்டல ஆயத்தமாநாடு பற்றி தனியார் மகாலில் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-08-25 07:41 GMT
ராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி மூப்பு அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல அளவிலானஅ ஆத்த மாநாடு நடத்துவது பற்றி தனியார்மகாலில் மாவட்ட தலைவர் ரெக்ஸ்ஆனந்தகுமார் தலைமையிலும் மாவட்ட தலைவராக வினோத் பாபு ஆகியோர் கலந்துகொண்டு. ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்311, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வரை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு முதல்கட்டமாக அனைத்து மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. 01.06.2006 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 15ஆண்டு காலமாக வழங்கப்பட்டுவருகிறது. மேலும் ஒரே பணி கல்வித்தகுதிக்கு ரூ 8370, அதன் பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5200 என்றும் வழங்கப்பட்டுவருகிறது.திமுக அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் ஆகியும் 20,000 ஆசிரியர்ளின் ஊதிய முரண்பாட்டை களைந்து உரிய ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை.

Similar News