ராமநாதபுரம் விவசாயிகளுக்கு உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது

முதுகுளத்தூர் அருகே தொழுஉரம் தயாரித்தல் தொடர்பாக விவசாயிகளுக்கான பயிற்சி வேளாண்மை துறை சார்பில் நடைபெற்றது.;

Update: 2025-08-25 07:48 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள மகிண்டி ஊராட்சியில் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன் தலைமையில் விவாசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் வரவேற்று பேசினார். இந்த பயிற்சியில் ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைப்பதன் நோக்கம் மற்றும் அவசியம் குறித்தும், உரப் பயன்பாட்டில் உள்ள உத்திகள் குறித்தும் சமச்சீர் உரமிடுவதால் உண்டாகும் பலன்கள் குறித்தும், மண்வளம் பற்றி அறிந்து அதற்கேற்ற அளவில் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், விவசாயிகள் மக்கிய தொழு உரம், பண்ணைக் கழிவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப் பூண்டு சனப்பு போன்ற பயிர்களை பயிரிட்டு நிலத்தில் மடக்கி உழுது மண்வளத்தைப் பெருக்க வேண்டும் என உதவி இயக்குனர் நாகராஜன் பேசினார். உழவன் செயலி மூலம் விவசாயிகள் வேளாண்மை மற்றும் சகோதரத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் தமிழ்அகராதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரதீபா, மகிண்டி ஊராட்சிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் இந்து செய்தார்.

Similar News