ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டத்துக்காக தோன்றிய பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

கூட்டுக் குடிநீர் பள்ளம் தோண்டி ஒரு வாரம் ஆகியும் எந்த வேலையும் நடக்காமல் உள்ளது இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்;

Update: 2025-08-25 07:55 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பைப் லைன் பொருத்துவதற்காக ஒரு வாரத்துக்கு முன்பாக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது ஆனால் இதுவரை அந்த பகுதியில் எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை மேலும் அந்தப் பகுதியில் மீன் கடை உள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது புதிய பேருந்து நிலையம் பின்புறமாக இருந்த பழைய மீன் கடைகள் கட்டிடங்கள் மிகவும் மோசமாக இருந்ததால் அதனை எடுத்துவிட்டு புதிதாக கட்டித் தரப்படும் என்று சொல்லி இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை மேலும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மீன் கடைகள் தற்சமயம் உள்ளதால் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர் இந்நிலையில் வந்த பகுதியில் கூட்டுக் குடிநீர் பள்ளம் தோன்றியுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்தினர் செல் ஏற்படுகிறது

Similar News