கிழக்கு கடற்கரை சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கிழக்கு கடற்கரை சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு;
கிழக்கு கடற்கரை சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் அருகே ஓதியூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.மின்கம்பம் மீது வாகனம் மோதியதில் ஒயர் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து சாலையிலிருந்து மின் கம்பிகளை அகற்றினர்.இதனால் கிழக்கு கிழக்குச் சாலையில் போக்குவரத்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர் மின்கம்பிகளை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அறுந்து கிடந்த கம்பியை கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.