செங்கல்பட்டில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

செங்கல்பட்டில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்;

Update: 2025-08-25 13:46 GMT
உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்டப்பேரவை தோ்தலுக்கு ஆதரவு திரட்டி வருகிறாா். இந்நிலையில் செங்கல்பட்டில் நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ நடைபயணமாக சென்றாா். முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளா் கே. நாகராஜன், நகர செயலாளா் முருகன் , நிா்வாகிகள் கரிமேடு கண்ணன், அவைத் தலைவா் கோதண்டம், பொருளாளா் முருகன், நகர நிா்வாகிகள் முனீக் பாட்ஷா, முருகன் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். ராட்டினம் கிணறு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது: 234 தொகுதிகளிலும் ரதயாத்திரை செல்ல உள்ளேன். போகுமிடமெல்லாம் மக்களின் வரவேற்பு அற்புதமாக உள்ளது . இலங்கையில் கேப்டனுக்கு கொடுத்த ரதத்தில் தான் பிரசாரம் மேற்கொள்கிறோம். விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமான கொண்டாடி நலத்திட்ட உதவிகள்அன்னதானம் வழங்கப்படும். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தோ்தல் குறித்து எங்களை நிலையை தெரிவிப்போம். எத்தனை கட்சிகள் மாநாடு நடத்தினாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது. செங்கல்பட்டு தொகுதியில் அனகை முருகேசன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது பள்ளி மேம்பாடு கட்டடம், நியாயவிலைக் கடை, அங்கன்வாடி கட்டடம் சாலைகள் என அனைத்து பகுதியிலும் மக்களுக்கான தேவைகளை செய்துள்ளாா் என்றாா்.

Similar News