காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு செய்தார்

காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு செய்தார்;

Update: 2025-08-25 14:32 GMT
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 26.08.2025- அன்று விரிவாக்கம் செய்யவுள்ளதை தொடர்ந்து, காரியாபட்டி பேரூராட்சி, கே.செவல்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள அமலா துவக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து கேட்டறிந்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், காரியாபட்டி பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். பின்னர், காரியாபட்டி பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வார்டு எண்.10-ல் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பு முதல் தெருவில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வார்டு எண்.7 பாண்டின் நகர் 1,2,3,4 மற்றும் 5-வது தெருக்களில் ரூ.44 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Similar News