பேராவூரணி - சேதுபாவாசத்திரம்  சாலை விரிவாக்கப்பணி விரைந்து முடிக்கப்படுமா...? 

சாலைப்பணி;

Update: 2025-08-25 16:41 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் சாலைப் பணி நிறுத்தப்பட்டதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக சாலை அகலப்படுத்தும் பணியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி - சேதுபாவாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் மருங்கப்பள்ளம், துறையூர்,, சேதுபாவாசத்திரம் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை ஓரங்களில் கப்பிகள் சிதறி கிடக்கிறது. கனரக வாகனங்கள் லாரி, பேருந்துகள் செல்லும் போது தூசிகள் பறந்து வருகிறது. மேலும், சாலை ஓரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். எனவே, வாகன விபத்து ஏற்படாமல் இருக்க உடனடியாக சாலை அகலப்படுத்தும் பணியை துரிதப்படுத்தி, தார்ச்சாலை அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News