பட்டுக்கோட்டை டாஸ்மாக் கடையில் தகராறு செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
கைது;
பட்டுக்கோட்டையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் விற்பனையாளர்களிடம் தகராறு செய்து மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம் நகர காவல்நிலையத்திற்குஉட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் மதுபானக்கடையில் மது வாங்கிய வீரமணி என்பவர் மதுபான கடை விற்பனையாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பணமில்லாமல் மது கேட்டு மிரட்டியதாகவும், 2 காலி பீர் பாட்டில்களை எடுத்து மதுபான கடையின் இரும்பு தட்டியில் அடித்ததாகவும் கடையின் விற்பனையாளரான வினோதன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து சரித்திர பதிவேடு குற்றவாளியான கொண்டிக்குளத்தைச் சேர்ந்த வீரமணி(வயது-46) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி சரித்திர பதிவேடு குற்றவாளியான கொண்டிக்குளத்தைச் சேர்ந்த வீரமணி(வயது-46) என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டி பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வேண்டுகோளின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டதின் படி மேற்படி குற்றவாளியை ஞாயிற்றுக்கிழமையன்று குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.