ஆரணி நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்துவதா. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு.

ஆரணி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நிகழ்ச்சியை நடத்துவதால் மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளனர்.;

Update: 2025-08-26 01:25 GMT
ஆரணி தச்சூர் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆக 31 அன்று ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த உள்ளதை அப்பகுதி மக்கள் ஆடல் பாடல் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஆரணி கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் ஆரணி நகராட்சி நடுநிலைபள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்துவதற்காக இடையூறாக இருக்கும் மரங்களை அப்பகுதி கவுன்சிலர் கார்த்திக் அனுமதியின்றி வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் பள்ளியில் உள்ள பழைய ஆலமரத்தின் கிளைகளையும் வெட்டியுள்ளனர். மாணவர்களுக்கு நிழல் தரும் மரத்தை வெட்ட அனுமதி கொடுத்தது யார் என அப்பகுதி மக்கள் புகார் மனுவில் கேள்வி கேட்டுள்ளனர். மேலும் இப்பகுதி திமுக கவுன்சிலர் கார்த்தி யாரையும் எதிர்பாராமல் சர்வாதிகரமாக மரத்தை வெட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த பள்ளியில் அவராகவே முடிவெடுத்து செய்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். மேலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டு இங்கு தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனையும் மீறி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதால் பள்ளியில் பல்வேறு சமூக விரோத செயல்களும் நடைபெறும். ஆகையால் பள்ளியில் பொது நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி தரக்கூடாது என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் சித்ராவிடம் கேட்டதற்கு எனக்கு தெரியாமலேயே மரக்கிளைகளை வெட்டியுள்ளனர் என்று கூறினார்.

Similar News