இடுகாட்டிற்கு பாதை கேட்டு கிராம மக்கள் மனு

நாகர்கோவில்;

Update: 2025-08-26 02:56 GMT
குமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட குளுமை விளை கிராம இந்து சாம்பவர்கள் இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் வெகு தூரம் சுமந்து சென்று இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டி உள்ளதால் இடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு ஊர் மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதில் வில்லுக்குறி பேரூர் செயலாளர் சகாதேவன், குளச்சல் செயலாளர் சுபாஷ், வன்கொடுமை தடுப்பு பிரிவு சவுத்ரி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் மணி பாபு, மண்டல தொகுதிp செயலாளர் ஞானசேகர், தொழிலாளர் விடுதலை முன்னணிp சிறுத்தை குமார், கிருஷ்ணன், பால்மணி மற்றும் மணி உட்பட பலன் கலந்து கொண்டனர்.

Similar News