குமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது அந்த பள்ளி வளாகம் முழுவதுமாக புதர் காடாக செடிகள் வளர்ந்து மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இந்த பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாட முடியாமலும், நடந்து செல்ல வே அச்சப்பட்டும் வந்தார்கள். இது குறித்து தகவல் தெரிந்த இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எல்லோரும் ஒன்று கூடி விளையாட்டு மைதானத்தை கிட்டாச்சி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். இங்கு பயின்ற முன்னாள் மாணவர்களான (மு) ஊராட்சி துணை தலைவர் மனோசிவா, மகாராஜன்(மு) ஒன்றிய கவுன்சிலர்,(மு)வார்டு உறுப்பினர் ரமேஷ், விஸ்வ இந்து பரிசத் காளியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நீலகண்ட ஜெகதீஷ், சொக்கலிங்கம் பிள்ளை, மற்றும் துணை தலைமை ஆசிரியர் ஆகியோர் இனைந்து ஆரம்பித்து வைத்தார்கள்,