அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்;

Update: 2025-08-26 07:21 GMT
மதுராந்தகம் நகராட்சியில் அரசு உதவி பெறும் 11 பள்ளிகளில் 645 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் முதலமைச்சருக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளி, இந்து கார்னேசன் நடுநிலைப்பள்ளியில், சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி, சிஎஸ்ஐ பிரைமரி பள்ளி உள்ளிட்ட 11 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 645 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி, நகர செயலாளர் குமார், மதுராந்தகம் நகராட்சி ஆணையர் அபர்ணா ஆகியோர் கலந்துகொண்டு காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தனர். மாணவர்களுக்கு காலை உணவுகளை வழங்கினர். மாணவர்கள் கூறுகையில் காலையில் அவசர அவசரமாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து விடுவோம் அதனால் சரியான முறையில் பாடம் பயில முடியாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்கள் நன்றாக படிக்கும் வகையில் மாணவர்கள் பசியை போக்கும் வகையிலும் காலை உணவு திட்டம் தொடங்கி உள்ளார் என புகழாரம் சூட்டினார்.

Similar News