சணப்பிரட்டி- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கல்.
சணப்பிரட்டி- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கல்.;
சணப்பிரட்டி- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கல். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டி தனியார் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன்,துணை மேயர் தாரணி சரவணன் ,மண்டல தலைவர்கள் கனகராஜ் கோல்டு ஸ்பாட் ராஜா ,கரூர் மத்திய தெற்கு நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் அரசு துறை அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களில் இருந்து மனுக்கள் பெறுவதை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அனைவரும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.