பேரிகை: பசுமை குடிலில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு.

பேரிகை: பசுமை குடிலில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு.;

Update: 2025-08-26 08:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்துள்ள நெரிகம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ்(22) கூலித்தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் பாகலுார் அருகே அச்சந்திரம் கேட் பகுதியல் வெங்கடப்பா கவுடு என்பவரது நிலத்தில் 15 அடி உயரத்தில் பசுமை குடில் அமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக கீழே தவறி விழுந்தார். படுகயம் அடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாகலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாகலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News