வாணியம்பாடி பைபாஸ் சாலையில் மழைநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு..
வாணியம்பாடி பைபாஸ் சாலையில் மழைநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் மழைநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த சாமிநாதன் இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து வருகிறார். இவர் தன்னுடைய பசுமாட்டை மெச்சலுக்காக விட்டு மாலை வீட்டிற்க்கு பிடித்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று தன்னுடைய பசுமாட்டை பெருமாள்பேட்டை பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி காலியாக உள்ள இடத்தில் மேச்சலுக்காக விட்டு மாலை வீட்டிற்க்கு சர்வீஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப் மீது பசுமாட்டை பிடித்து சென்று கொண்டு இருந்தார். அப்போது சிமெண்ட் சிலாப் உடைந்து பசுமாடு காவாயில் விழுந்தது. சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசிபி இயந்திரம் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் பசு மாட்டின் ஒரு கொம்பு சேதம் அடைந்து சிராப்புகள் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.