காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-08-26 11:16 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி, எஸ்.பி.கே தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கும், உயர்கல்வி துறைக்கும் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டு மிக முக்கியமான துறைகளுக்கான திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி வேண்டுமே அதனை ஒதுக்கீடு செய்து தருகிறார்கள். அந்த வகையில் இன்று நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக நன்றாக சாப்பிட்டு, நன்றாக படித்தால் தான் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்கு உதவியாக இருப்பார்கள் என்ற எண்ணத்தோடு இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தரமான கல்வி கொடுத்து, அந்த குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல குழந்தைகளாக அறிவார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக நிதியை ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நகர்ப் புறத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மொத்தம் 1056 பள்ளிகளில் 46,091 மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு திட்டம் சிறப்பாக செயலப்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் 3,188 மாணவர்களுக்கும், சிவகாசி மாநகராட்சி பகுதியில் 11 பள்ளிகளில் 4,982 மாணவர்களுக்கும், 5 நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் 101 பள்ளிகளில் 15,072 மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 144 பள்ளிகளில் 23,242 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 1200 ஆரம்ப பள்ளிகளில் கல்வி பயிலும் 69,333 மாணவ செல்வங்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

Similar News