நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.

நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-08-26 11:18 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, காரியாபட்டி பேரூராட்சியில் அமலா துவக்கப்பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும், இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளும் நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்காக அறிவிக்கும் திட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்பது சிறந்த திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு உணவு வழங்கக்கூடிய இந்த திட்டம் சர்.பி.டி தியாகராயர் காலத்தில் முதன்முறையாக சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு பிறகு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகியோர்களால் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதிய உணவு திட்டத்தையும் தாண்டி காலையிலும் உணவு வழங்க வேண்டும் என்று இந்த திட்டத்தை செயல்படுததி வருகிறார்கள். அதன் பயனாக இன்று பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமப் பகுதிகளுக்கு மட்டும் செயல்படுத்தி வந்த இந்த திட்டம், நகரப்பகுதியில் இருக்கக்கூடிய அரசுப்பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. நகர்ப்பகுதியில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கக்கூடிய குழந்தைகளும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். அவர்களும் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது நகர்ப்புற பகுதிகளில் இருக்கக் கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 144 பள்ளிகளுக்கு இந்த காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது விருதுநகர் மாவட்டத்தில் 23,242 குழந்தைகள் பயனடைகிறார்கள். ஒட்டு மொத்தமாக 1200 பள்ளிகளில் ஏறத்தாழ 70,000 குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வந்ததற்கு பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிகிறது.. அவர்களுடைய கற்றல் திறன் அதிகமாகிறது. காலையில் அவர்களுக்கு வயிறு நிரம்பி வருகின்ற பொழுது பாடங்களை கவனிக்க கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. எனவே கற்றல் சூழ்நிலையில், படிக்கக்கூடிய தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த காலை உணவு திட்டம் ஏற்படுத்துகிறது. அதுபோல குடும்பத்தில் வீட்டுத் தலைவிகளாக இருக்கக்கூடிய பெண்கள் காலை உணவு செய்து குழந்தைகளை அனுப்புவது என்பது மிகப்பெரிய சிரமாக இருக்கிறது. காலையில் பள்ளிக்கூடத்தில் உணவளிக்கின்ற பொழுது பெண்களுக்கு வீட்டினுடைய தலைவியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு பெருமளவில் அந்த சுமைகள் குறைக்கப்படுகிறது. எனவே ஒரு சமுதாய நோக்கோடு, அதே நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு நல்ல கல்வி சூழலை உருவாக்கக் கூடிய வகையில் பள்ளிக்கூடத்தை நோக்கி இன்னும் நிறைய பிள்ளைகளை இழுக்கக்கூடிய வகையிலே இந்த திட்டம் சிறப்பாக வந்திருக்கின்றது. அந்தத் திட்டத்திற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பை தரவேண்டும். இன்றைக்கு எப்படி வெற்றி கரமாக துவக்கி இருக்கிறோமோ, அதுபோல அதை வெற்றி கரமாக வரக்கூடிய வருடங்களில் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளிர் திட்டம், பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிற அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Similar News