சிவகாசியில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சரக்கு ஆட்டோ வாகனம்!
சிவகாசியில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சரக்கு ஆட்டோ வாகனம்!;
சிவகாசியில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சரக்கு ஆட்டோ வாகனம்! சிவகாசி சுந்தரம் தெருவில் வசிக்கும் மகேஸ்வரன் என்பவரது மகன் விஷால்( வயது 27 ). சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலுள்ள பொன் பாலாஜி நகரில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். இரவு கடையை மூடிவிட்டு பட்டாசு பண்டல்களை ஏற்றிக்கொண்டு செல்லப் பயன்படுத்தும் டாட்டா ஏசி லோடு வேன் வாகனத்தை பட்டாசு கடையின் முன்பாக நிறுத்திய விஷால் வீட்டுக்குச் சென்றார். நள்ளிரவில் திடீரென டாட்டா ஏசி வாகனத்தின் முன் பகுதி தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை பீச்சி யடித்த போதிலும் லோடுவேன் வாகனம் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு வீரர்களின் சாமர்த்தியத்தால் அருகிலிருந்த கார் மற்றும் பட்டாசுக் கடைகளுக்கு தீப் பரவாமல் தடுத்து பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. டாட்டா ஏசி லோடு வேன் வாகனத்தின் முன் பகுதியிலிருந்த மின் வயரில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.