மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகை

15 நாட்கள் கடை அடைத்ததால்;

Update: 2025-08-26 11:26 GMT
குமரி மாவட்டம் மேல்புறம் அருகே பாகோடு பேருராட்சிக்கு உட்பட வட்ட விளை பகுதியில் அமுதம் நியாய விலை கடை செயல் பட்டு வருகின்றது. 894 குடும்ப அட்டைகளும், 78 வறுமை கோட்டுக்கு உட்பட குடும்ப அட்டைகளுக்கும் அரிசி, கோதுமை,சீனி,பாமாயில் உட்பட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த ரேஷன் கடை திறக்காமல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டாமல் இருந்ததால், பாதிக்கப்பட்ட பயனாளிகள் இன்று பாகோடு பேருராட்சி துணை தலைவர் ஜெனிமோள் தலைமையில் பூட்டப்பட்ட கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் மதியம் வரை போராட்டம் தொடர்ந்ததை தொடர்ந்து வேறு ரேஷன் கடையில் இருந்து ரேஷன் பணியாளரை கொண்டு வந்து தற்காலிகமாக பொருட்கள் வினியோகம் செய்தனர். இந்த கடையில் வேறு மாவட்டத்தில் இருந்து தற்காலிக பணியாளர்களை வைத்து பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் நிரந்தர பணியாளர்களை நியாமித்து நிரந்தரமாக பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த போராட்டத்தில் பாகோடு பேருராட்சி முன்னாள் கவுன்சிலர் எட்வின் ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News