விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இயற்கை உபாதைக்காக சென்று பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்....
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இயற்கை உபாதைக்காக சென்று பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்....;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இயற்கை உபாதைக்காக சென்று பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்.... சிவகாசி அருகே பள்ளப்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலுத்தாய் 53. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் இன்று இரவு ஊருக்கு அருகே இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சுமார் 40 அடி ஆழம் கொண்ட செயல்படாத பாழடைந்து கிணற்றில் தவறி விழுந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அப்பகுதியில் சென்று பார்த்த போது வேலுத்தாய் கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி கிணற்றில் விழுந்த பெண்ணை நூல் கூடையில் உயிருடன் பத்திரமாக மீட்டனர். துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தீயணைப்பு துறையினரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.