சாலை மறியல் போராட்டத்தில் கலாய்த்த நபரை அள்ளிச் சென்ற காவல்துறை.
சாலை மறியல் போராட்டத்தில் கலாய்த்த நபரை அள்ளிச் சென்ற காவல்துறை.;
சாலை மறியல் போராட்டத்தில் கலாய்த்த நபரை அள்ளிச் சென்ற காவல்துறை. கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் உள்ள புதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் கொத்தனார் வேலை செய்து வந்த மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தை உள்ள நிலையில் ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அந்த பெண்ணை சந்திக்க சென்றவர் மாயனூர் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மணிகண்டனின் உறவினர்கள் கள்ளக்காதலி உறவினார்கள் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று மாலை கரூர் காந்திகிராமம் பகுதியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் எச்சரித்தும் கேட்காமல் சாலை மறியலில் ஈடுபட்டதால் அனைவரையும் குண்டு கட்டாக வேனில் ஏற்றி சென்றனர். அப்போது ஒரு இளைஞர் மயக்கம் விட்டது போல சாலையோரம் படுத்து நடித்து காவல்துறையினரை போக்கு காட்டினார். சிறிது நேரம் விட்டு பிடித்த போலீசார் நாடகம் ஆடிய அந்த இளைஞரையும் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.