கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் விடுத்துள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி குறிப்பில்; ஆதி முதல்வனாய் இருந்து அருள்பாவிக்கும் விநாயகர் பெருமானின் பிறந்த நாளினை விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். திருக்கோவில்களில் காலை முதல் அபிசேகங்கள், ஆராதனைகள் நடத்தி பால், தேன், அவல், பொரி, கற்கண்டு, சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், வடை, பாயசம் போன்றவற்றை இலை போட்டு விநாயகருக்கு படைத்து, வழிபாடுகள் செய்து பக்தர்களுக்கு கொடுத்து மகிழும் மகத்தான திருநாள் விநாயகர் சதுர்த்தி என்னும் பொன்நாள். அவர் அருள் நமக்கு கிடைக்கட்டும். அவர் இல்லாமையை போக்கிடுவார், இனியவைகளை நடத்திடுவார், நன்மைகளை செய்திடுவார், நம்பிக்கையை தந்திடுவார். இத்திருநாளில் மக்கள் அனைவரும் என்றும் மகிழ்ச்சி பொங்க, செல்வங்கள் செழிக்க, சந்ததிகள் வாழ்வு சிறக்க, வாழ்வாங்கு வாழ, வளம் பல காண விநாயகர் பெருமான் திருவடியை வணங்குகிறேன். அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். என கூறியுள்ளார்.