ஆரணி ஆர் சி எம் நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்.
ஆரணி நகரம், ஆர்.சி.எம் நிதி உதவி பெறும் பெண்கள் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடைபெற்றது.;
ஆரணி நகரம், ஆர்.சி.எம் நிதி உதவி பெறும் பெண்கள் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இதில் ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி எம்.எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்து பள்ளி மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்டார். பள்ளி தலைமை ஆசிரியை அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் ஆரணி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, நகர செயலாளர் வ.மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் மாமது, மோகன் சுந்தர், நகர மன்ற உறுப்பினர்கள் மாலிக் பாஷா அரவிந்தன் பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.